கொடுமுடியில் துவரை நாற்று நடவுப் பணி: ஈரோடு ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் கொடிமுடி வட்டாரத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் துவரை நாற்று நடவு செய்யும் பணியினை செய்தியாளர்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கொடிமுடி வட்டாரத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் துவரை நாற்று நடவு செய்யும் பணியினை செய்தியாளர்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் கொடிமுடி வட்டாரம் மூர்த்திபாளையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய வளர்ச்சித் திட்டத்தின் கீழ், துவரை நாற்று நடவு செய்யப்பட்டிருந்ததை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கொடிமுடி வட்டாரம், மூர்த்திபாளையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பூபதி என்பவர் 1 எக்டர் பரப்பளவில் ரூ.9 ஆயிரம் மானியத்தில் CO-8 துவரை நாற்று நடவு செய்திருந்ததை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, மானியத்திட்டங்கள், ஊடுபயிர் சாகுபடி வருவாய் குறித்து பயனாளியிடம் கலந்துரையாடினார்.
மேலும், விதை, திரவ உயிர் உரங்கள், பயறு வகை நுண்ணூட்டம் வழங்கப்பட்டுள்ளது எனவும், புதிய தொழில்நுட்பமாக துவரை நாற்று நடவு செய்து வருவதாகவும், உழவு செய்தல், நாற்று நடுதல், டி-அம்மோனியம் பாஸ்பேட் தெளித்தல் போன்ற பணிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படுவதாகவும், இத்திட்டம் மிகுந்த இலாபகரமாக உள்ளதாகவும் பயனாளி தெரிவித்தார்.
தொடர்ந்து, இச்சிப்பாளையம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் கீழ் திரு.மோகன்ராஜ் என்பவர் மொத்த மதிப்பு ரூ.3.37 லட்சம் மானியமாக ரூ.87 ஆயிரத்து 500ல் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைந்திருந்ததையும் நேரில் சென்று பார்வையிட்டு, பயனாளியுடன் திட்டத்தின் பயன்கள் குறித்து அவர் கலந்துரையாடினார்.
முன்னதாக, கொடுமுடியில் பொதுப்பணித்துறையின் சார்பில் பாரம்பரியக் கட்டிடத்தின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் உள்ள நெடுஞ்சாலைத் துறையின் பயணியர் மாளிகை ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு செய்யப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) ரா.ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் யாசர் அராபத், வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் முத்துக்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.