விபத்தில் பாதித்தவரின் உயிரை காப்பாற்ற உதவி புரிந்தவருக்கு நற்கருணை வீரர் விருது: ஈரோடு ஆட்சியர் தகவல்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவரை பொன்னான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றியவருக்கு 'நற்கருணை' வீரர் விருது, பரிசு தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;

Update: 2024-11-19 13:15 GMT

சாலை விபத்தில் பாதித்தவரை காப்பவர்களுக்கு விருது (பைல் படம்).

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவரை பொன்னான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றியவருக்கு 'நற்கருணை' வீரர் விருது, பரிசு தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

சாலை பாதுகாப்பினை மேம்படுத்த இந்திய அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் ஆண்டுதோறும் சாலைவிபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சாலை விபத்துகளில் சிக்கியோரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உதவி புரிதல் என்பது சாலை பாதுகாப்பின் ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

சாலை விபத்தினால் பாதிப்படைந்தவரை பொன்னான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்ற உதவி புரிந்த நபர்களுக்கு இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் (சாலை பாதுகாப்பு) அமைச்சகத்தின் மூலமாக, நற்கருணை வீரர்கள் விருதும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் ரூ.5 ஆயிரம் மற்றும் மாநில அரசின் பங்காக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.10 ஆயிரம் வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தினால் பாதிப்படைந்தவரை பொன்னான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்ற உதவி புரிந்த தகுதியான நபர்களுக்கு நற்கருணை வீரர்கள் விருதும் மற்றும் பரிசுத் தொகையும் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News