கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முழு வீரிய தன்மையுடன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கிடைத்திடும் வகையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதை ரத்து செய்யா வேண்டும். தாய்சேய் நலப்பணிகள் பாதிக்காத வகையில் வாரம் ஒரு நாள் வேலை நாட்களில் முகாமில் மட்டும் தடுப்பூசி செலுத்திடவும், கொரோனோ தடுப்பூசி பணிக்கு இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும். தமிழக அரசு அறிவித்த ஊக்க ஊதியம் அனைத்து கிராம பகுதி சுகாதார செவிலியர்களுக்கு கிடைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.