ஈரோடு மாநகராட்சி 51 வார்டில் விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு மாநகராட்சி 51 வார்டில் விசிக வேட்பாளர், நாடார் மேடு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2022-02-10 08:00 GMT

ஈரோடு மாநகராட்சி 51வது வார்டில் போட்டியிடும் விசிக வேட்பாளர் சுதா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஈரோடு மாநகராட்சி 51வது வார்டில் திமுக கூட்டணியில் போட்டியிடும் சுதா நாடார் மேடு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மாநகராட்சி 51வது வார்டில் திமுக கூட்டணி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுதா என்பவர் போட்டியிடுகிறார்.

இதனையடுத்து கட்சியினர் உடன் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இன்று நாடார் மேடு பின்புறம் உள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று திமுக சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் அடிப்படை வசதிகளை உடனடியாக தீர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்தார்.  வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News