ஈரோடு ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்

தெலங்கானாவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ரூ.20 கட்டணம் அறிவித்து வசூலிக்கப்படுகிறது;

Update: 2021-11-11 17:00 GMT

ஈரோடு ரயில் நிலையத்தில்டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும்   பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும். என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் வெளியூர் மற்றும் வெளிமாநி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர, பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதேபோல் தொழில் ரீதியாகவும், சொந்த வேலையாகவும் பலரும் ரயிலில் சென்று வருகிறார்கள்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான ரயில்களே இயக்கப்பட்டன. மேலும், ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம்  டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. ஈரோடு ரயில் நிலையத்தில் ரூ.50 வசூலிக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகளை ரயிலில் ஏற்றி விட வருபவர்களை தவிர்ப்பதற்காக,  பிளாட் பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.  இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்துவிட்டதால், பெரும்பாலான ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே  ஈரோடு  ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்  கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தெற்கு ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா கூறியதாவது: ஈரோடு ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம்  டிக்கெட் கட்ட ணத்தை குறைக்க வேண்டும். என்று பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் குறைக்கப்படவில்லை.  இந்தியன்  ரயில்வே என்ற பெயரை வைத்து கொண்டு, தமிழ்நாட்டில் பிளாட்பார்ம் டிக்கெட்  கட்ட ணம் ரூ.50 வசூலிக்கப்படுகிறது. தெலங்கானாவில் செகந்திராபாத் ரயில்  நிலையத்தில் ரூ.20 கட்டணம் அறிவித்து வசூலிக்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே கொள்கை திட்டத்தின் கீழ் செயல்படும், மத்திய அரசு தமிழகத்திலும் ரயில் நிலைய பிளாட்பார்ம்  கட்டணத்தை குறைக்க முன்வ ரவேண்டும் என்றார்.

Tags:    

Similar News