ட்ரீ டிரஸ்ட் வாயிலாக ஈரோடு சிப்காட் வளாகத்தில் 2000 மரக்கன்று நடவு

ட்ரீ டிரஸ்ட் வாயிலாக, ஈரோடு சிப்காட் வளாகத்தில் 6 ஏக்கர் பரப்பில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Update: 2021-12-01 11:00 GMT

ஈரோடு சிப்காட் பகுதியில், ட்ரீ டிரஸ் அமைப்பின் சார்பில் மரக்கன்று நடவு நிகழ்வின் நிறைவு விழா நடைபெற்றது. 

ஈரோடு மாவட்டம்,  சிப்காட் வளாகத்தில், ட்ரீ டிரஸ் (Tree டிரஸ்ட்) அமைப்பின் மூலமாக, 6 ஏக்கர் பரப்பளவில், 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இப்பணியின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ட்ரீ டிரஸ்ட் நிறுவனர் யோகநாதன் தலைமை வகித்தார். இவ்விழாவிற்கு ஈரோடு மாவட்ட வன அலுவலர் கௌதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,  சிறப்புரையாற்றினார்.

சிப்காட் திட்ட அலுவலர் சுஜா, சூழலியலாளர்கள் சாந்தகுமார், நன்றி அறக்கட்டளையின் கிருஷ்ணபிரகாஷ், ஜெகன், சக்திவேல் உட்பட 50க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கி,  தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.

Tags:    

Similar News