வீரப்பன்சத்திரத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-12-20 06:00 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வீரப்பன்சத்திரம் பஸ்நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டசெயலாளர் மேசப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய கடன் வழங்க குறியீடு நிர்ணயித்த பணியாளர்களை கண்ணிய குறைவாக நடத்தக்கூடாது. மாநில அளவில் கடன் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க வேண்டும். வாய்மொழி உத்தரவை கைவிட வேண்டும்.

அரசாணைப்படி பணியாளர்களுக்குன ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பொங்கல் தொகுப்பு பேக்கிங் செய்து வழங்கிட வேண்டும். பணியாளர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதியம் காலதாமதமின்றி வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பொதுப்பதவித்தரம் - பழிவாங்கும் கருவியாக பயன்புடுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகனளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Tags:    

Similar News