பீடி கம்பெனிக்கு தமிழ் கடவுள் பெயர்: ஈரோடு எஸ்பி-யிடம் மனு புகார் மனு
பீடி கம்பெனிக்கு தமிழ் கடவுள் பெயர் வைத்தது மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக இந்து மக்கள் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.;
மனு கொடுக்க வந்த இந்து மக்கள் கட்சி.
இந்து மக்கள் கட்சியின் ஈரோடு மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் தலைமையில் அக்கட்சியினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் மனு அளித்தனர். புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா உட்பட்ட மஜீத் வீதியை சேர்ந்தவர் அப்துல் கரீம். இவர் தமிழ் மக்கள் வணங்கும் முருகரின் பெயரையும், அவரது புகைப்படத்தையும் தனது பீடி கம்பனிக்கு வைத்துள்ளார். தொடர்ந்து அதை சமூக வலைதளங்களில் பரவி கோடிக்கணக்கான இந்துக்களின் கடவுளை இழிவு படுத்தி உள்ளது .
ஒரு இஸ்லாமியர் அவர் மதத்தின் பெயரை வைக்காமல் தமிழ் கடவுளின் பெயரை வைத்து, மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாக அவரது செயல் உள்ளது. இந்துக்களின் மன உளைச்சலுக்கு ஆளாகிய அப்துல் கரீம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.