ஊதியத்தை குறைத்த ஸ்விக்கி நிறுவனம்: ஆட்சியரரிடம் மனு கொடுக்க வந்த ஊழியர்கள்

ஈரோடு மாவட்ட ஸ்விக்கி ஊழியர்களின் ஊதிய குறைப்பை தடுத்து உரிய ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்‌.;

Update: 2022-02-05 11:15 GMT
ஊதியத்தை குறைத்த ஸ்விக்கி நிறுவனம்: ஆட்சியரரிடம் மனு கொடுக்க வந்த ஊழியர்கள்

மனு அளிக்க வந்த ஸ்விக்கி ஊழியர்கள்.

  • whatsapp icon

ஈரோடு மாவட்டத்தில் ஆன்லைனில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில் ஊழியர்களாக 300 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் பவானியில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வரும் நிலையில், கடந்த மாதம் முதல் இவர்களின் ஊதியம் குறைக்கப்பட்டதாகவும், இதனால் தங்களின் அன்றாட வாழ்க்கை சிரமப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஊதிய குறைப்பை தடுத்து உரிய ஊதியத்தை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்‌. ஆட்சியர் இல்லாத காரணத்தால் ஊழியர்கள் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News