ஈரோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருமகன் ஈவெரா எம்எல்ஏ ஆய்வு

மாணவிகளின் கோரிக்கையான ஸ்மார்ட் கிளாஸ், நூலகங்கள் குறித்த கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் பரிசீலிப்பதாக கூறினார்.

Update: 2021-10-13 13:30 GMT

ஈரோடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருமகன் ஈவெரா எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் காவேரி ரோட்டில் அமைந்துள்ள ஈரோடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருமகன் ஈவெரா எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். இப்பணியின் போது பள்ளியின் சத்துணவுக் கூடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், மாணவிகள் உணவு அருந்தும் இடங்கள், கழிப்பிட வசதிகள் குறித்து கேட்டறிந்து மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தார். மேலும் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் கோரிக்கைகளான,

தொடுதிரை கணினி மூலம் கல்வி கற்றல் (SmartClass), நூலகங்கள், விளையாட்டுத்துறை மேம்பாடு குறித்த கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி பள்ளியில் தயாரித்த சத்துணவின் தரத்தையும் ஆராய்ந்தார். நிகழ்வின்போது ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரவி , பள்ளியின் தலைமை ஆசிரியை மாலா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News