ஊழலுக்கான அஸ்திவாரத்தை ஸ்டாலின் கண்டுபிடிக்க வேண்டும்: அண்ணாமலை
அறிவியல் பூர்வமான ஊழலுக்கான அஸ்திவாரத்தை ஸ்டாலின் முதலிலேயே களை எடுக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.;
ஈரோட்டில் ஈரோடு , சேலம் , கோவை உள்ளிட்ட 6 மாவட்ட பா.ஜ.க உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தேசிய பொதுசெயலாளர் அருண்சிங் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை, சட்ட உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் தடுப்பூசி எடுத்துச் சென்று இதுவரை 100 கோடியே 40 லட்சம் கொரோனோ தடுப்பூசி போடப்படப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கடின உழைப்பால் தான் 100 கோடி தடுப்பூசி போட முடிந்தது. தடுப்பூசி கொண்டு வந்ததன் மூலம் பிரதமர் பல உயிர்களை காப்பாற்றியுள்ளார். செந்தில்பாலாஜியை, முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் என திமுகவின் எல்லா தலைவர்களாலும் குற்றம்சாட்டப்பட்டவர். தமிழகத்தில் செயற்கையாக மின் பற்றாக்குறையை ஏற்படுத்தி, வெளியில் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குக்கின்றனர். தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என சொன்ன செந்தில்பாலாஜி ஏன் 20 ரூபாயருக்கு வெளியிலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டும்.
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினால் ஆவணங்கள் கிடைக்கும். கோவை , திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் அதிபர்களை செந்தில் பாலாஜி மிரட்டி வருகிறார். தற்போது போடப்பட்டுள்ள அறிவியல் பூர்வமான ஊழலுக்கான அஸ்திவாரத்தை ஸ்டாலின் முதலிலேயே களை எடுக்கட்டும். மேலும் செந்தில்பாலாஜி என் மீது வழக்கு தொடரட்டும் நீதிமன்றத்தில் பதில் சொல்லுகிறேன். திமுக ஆட்சிக்கும் வரும் போது எல்லாம் காவலருக்கு திண்டாட்டம் தான். இவ்வாறு தெரிவித்தார்.