ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் குளம் போல் தேங்கிய தண்ணீர்

ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதனை அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-18 12:01 GMT
ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாக வாகன நிறுத்துமிடத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் தென்னிந்திய அளவில் புகழ் பெற்ற அப்துல் கனி மார்க்கட் என்று அழைக்கப்படும் ஜவுளி சந்தை இயங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியில் ஜவுளி வணிகர்களுக்காக 50 ஆயிரம் சதுர அடியில் ரூ.54 கோடி மதிப்பில் 292 கடைகளை உள்ளடக்கிய 4 மாடி வணிக வளாகம் கட்டப்பட்டது.

2019-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு பணிகள் முடித்து திறப்பு விழா செய்யப்பட்டது. இன்னும் வணிகர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படாத நிலையில், இந்த கட்டிடத்தின் வாகன நிறுத்தத்திற்கான கீழ் பகுதி யில் கடந்த ஒரு வார காலமாக தண்ணீர் ஊற்றெடுத்து முழங்கால் அளவிற்கு குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கட்டுமான பணிகள் தொடங்கும் முன் நடத்தப்பட்ட மண் பரிசோதனை யில் இந்த இடம் கட்டுமானத்திற்கு உகந்த பகுதி அல்ல என முடிவுகள் இருந்ததாகவும், ஆனால் அதனை மறைத்து கட்டிடம் கட்டப்பட்டதாகவும் வணிகர்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் தண்ணீர் அதிகளவு ஊற்றெடுப்பதுடன் அஸ்திவாரம் மற்றும் அதற்கான தூண்கள் பலமிழக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் வணிகர்களுக்கு கடை களை ஒதுக்கும் முன்பாக கட்டுமானத்தையும், கட்டட த்தின் உறுதி தன்மையையும் ஆய்வு செய்ய வேண்டும் என வணிகர்கள், ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் அமைச்சர் முத்துசாமியும் வணிக வளாகத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்றும் வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள மோட்டார் பழுதாகி உள்ளதால் வேறொரு மோட்டார் மூலம் தண்ணீரை வெளி யேற்ற நடவடிக்கை எடுக்க ப்பட்டு வருகிறது. இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஜானகியிடம் கேட்ட போது, தண்ணீர் தேங்கி இருப்பது குறித்து தொழில் நுட்ப குழுவினரை (டெக்னிகல் டீம்) ஆய்வு செய்ய அறிவு றுத்தி இருப்பதாகவும், ஆய்வுக்கு பிறகே காரணம் தெரிய வரும் என்றார்.

Tags:    

Similar News