ஈரோடு மாவட்டத்தில் நாளை மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உட்பட 447 மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக 61600 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட உள்ளது. மேலும், இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 1788 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 100 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட உள்ளது.
ஆகவே, ஈரோடு மாவட்ட பொது மக்கள் இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தயக்கமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா மூன்றாம் அலையை தடுப்பது மட்டுமின்றி தங்களது இன்னுயிரையும் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளர்.