பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.;

Update: 2022-01-29 09:15 GMT

புகார் அளிக்க வந்தவர்கள்.

ஈரோடு அடுத்துள்ள அத்தானியை பகுதியை சேர்ந்தவர் வேலு என்கிற மருதமுத்து. இவர் அதிமுகவில் அத்தானி செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் என அறிமுகமாகிய இவர், கால்நடை உதவியாளர் பணி உட்பட பல்வேறு பணிகள் அரசு துறையில் காலியாக இருப்பதாகவும் அதனை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய பொதுமக்கள் இவரிடம் சுமார் 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அதிமுக அத்தானி செயலாளர் வேலு கூறியபடி வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதன் காரணமாக அவர்மேல் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவயை பற்றி விசாரிக்கையில், அவர் முன்னாள் அமைச்சரின் உதவியாளர் என கூறி மோசடி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிமுக செயலாளர் வேலு மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரகோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்  அளித்தனர்.

Tags:    

Similar News