பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: ஆசிரியர் போக்சாேவில் கைது

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம். ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2022-02-07 02:31 GMT

போக்சோ சட்டத்தில் கைதான பள்ளி ஆசிரியர் மாணிக்கம்.

சென்னிமலையில் 12-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் மாணவியின் சித்தப்பாவான அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ராமலிங்கபுரம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மகன் மாணிக்கம் (வயது 34). இவர் சென்னிமலை பகுதியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அதே போல் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 17 வயதான மாணவி ஒருவருக்கு மாணிக்கம் சித்தப்பா முறையாகும்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது ஆசிரியர் மாணிக்கம் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்ற போது வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட அவர் அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மாணவியின் பெற்றோர் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாணவியை அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியிடம் விசாரித்ததில் சித்தப்பா மாணிக்கம் கட்டாய பாலியல் உறவு கொண்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சென்னிமலை காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசால் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆசிரியர் மாணிக்கம் மாணவியை மிரட்டி கட்டாய பாலியல் பலாத்கார் செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

Tags:    

Similar News