கள்ளுக்கான தடையை நீக்க கோரி கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் சாலை மறியல்
கள்ளுக்கான தடையை நீக்க கோரி கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கள் இயக்கம் சார்பில் ஜன 21 ம் தேதி தடையை மீறி கள் இறக்குவோம் என அறிவிக்கபட்டிருந்தது. இதனையடுத்து ஈரோடு நாமக்கல் எல்லையில் உள்ள கருங்கல்பாளையம் சோதனை சாவடியில், பனங்காட்டு படை கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
அப்போது சாலையில் அமர்ந்து கள் இறக்க அனுமதி கொடு என்ற முழக்கங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதற்காக அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.