ஈரோடு-கோவை-பாலக்காடு-சேலம் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க கோரிக்கை
ஈரோடு - கோவை, ஈரோடு - பாலக்காடு, கோவை - சேலம் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி கோரிக்கை.
ஈரோடு - கோவை, ஈரோடு - பாலக்காடு, கோவை - சேலம் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க மதிமுக உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூர், சேலத்துக்கு சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்காக ரயில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ரூ.25 கட்டணத்தில் 100 கிலோ மீட்டர் தொலைவு செல்லும் இசாத் ரயில் சேவை திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என வலிறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்பு இருந்தபடி ரயில் பயணிகளுக்கு சீசன் டிக்கெட் வழங்க கணேசமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.