ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குடியரசு தின விழா
இணை இயக்குநர் கோமதி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.
73வது குடியரசு தினவிழா ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவ நலப்பணிகள், இணை இயக்குநர் கோமதி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் மருந்த்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் , ஆர்எம்ஓ கவிதா, மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என சுமார் 100-கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார்.