கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொள்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி

புகை சூழ்ந்த பகுதியில் நீர் தெளிப்பான் மூலம் நுழைந்து மீட்பது உள்ளிட்ட பல்வேறு செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.;

Update: 2021-10-13 06:30 GMT

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன்உன்னி பங்கேற்று நிகழ்ச்சியை பார்வையிட்டார். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பது, புகை சூழ்ந்த பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நீர் தெளிப்பான் மூலம் நுழைந்து மீட்பது, நீர்நிலைகளில் இருந்து மீட்பது, லிப்டில் சிக்கியவர்களை மீட்பது போன்ற செயல் விளக்கத்தினை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குழு  மற்றும் உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர். மாவட்ட அலுவலர் புளுகாண்டி உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாச்சலம் ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் , மாவட்ட உதவி ஆட்சியர் பாலாஜி மற்றும் வருவாய் துறையினர் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

Tags:    

Similar News