பிச்சைக்காரன் ஓடைப்பள்ள தண்ணீரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
பிச்சைக்காரன் ஓடைப்பள்ள தண்ணீரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு.;
ஈரோடு பவானி மெயின் சாலையில் உள்ள கிருஷ்துஜோதி பள்ளி எதிரே உள்ள பிச்சைக்காரன் ஓடைப்பள்ள தண்ணீரில் அழுகிய நிலையில் ஆண் உடல் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நஞ்சை தளவாய்பாளையம் விஏஓ சுரேஷ் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இதில் தண்ணீரில் அழுகிய நிலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மீட்கப்பட்டது. இறந்தவரின் உடல் அழுகி இருப்பதால் சுமார் 5 முதல் 6 நாட்கள் நீரில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்தவர் குறித்து அக்கம்பக்கத்தினருக்கு அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.