போலி பத்திரங்கள் மூலம் நிலமோசடி செய்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது
போலி பத்திரங்கள் தயாரித்து ஒரு ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்;
மொடக்குறிச்சி அருகே போலி பத்திரங்கள் தயாரித்து ஒரு ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு-கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ராஜீவ் நகரில் வசித்து வருபவர் மூர்த்தி .ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2011 ம் ஆண்டு சங்ககிரியை சேர்ந்த மூதாட்டி கண்ணம்மாள் என்பவரிடம் இருந்து நஞ்சை ஊத்துக்குளியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார்.இந்நிலையில் கடந்த 2020ல் கண்ணம்மாள் தனக்கு சொந்தமான வேறு நிலத்தை போலியான பத்திரங்கள் மூலம் மூர்த்தி தனது பெயரில் மோசடி செய்தது கண்டறிந்துள்ளார். இதுகுறித்த புகாரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மூர்த்தியை, நில அபகரிப்பு தடுப்பு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.