ஓடும் பேருந்தில் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடிய வாலிபர் கைது
ஈரோட்டில் ஓடும் பேருந்தில் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தை சேர்ந்தவர் சிவா. இவர் நகர பேருந்தில் சென்று கொண்டிருந்தார். பேருந்து நாச்சியப்பா சாலையில் வேகத்தடை வரும் போது அருகில் இருந்த அடையாளம் தெரியாத இளைஞர் சிவா தனது சட்டையின் மேல் பாக்கெட்டில் 20 ஆயிரம் மதிப்புள்ள லேட்டஸ்ட் மாடல் எம்ஐ செல்போனை திருடி பேருந்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளார். தப்பி ஓடிய இளைஞரை பொதுமக்களின் உதவியுடன் துரத்தி பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் செல்போன் திருடிய இளைஞர் புதுக்கோட்டையை சேர்ந்த சுதர்சன் என்பது தெரியவந்தது.