ரியல் எஸ்டேட் முகவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

போலியான ஆவணங்கள் தயாரித்து இருவருக்கு விற்பனை செய்த ரியல் எஸ்டேட் முகவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-03-09 14:30 GMT

மனு அளிக்க வந்த பெண்கள்.

ஈரோட்டை  சேர்ந்த சுசிலா தனது தாயாருடன் வசித்து வரும் நிலையில், அந்தியூர் அருகே உள்ள ஆசிரியர் காலனியில் ரியல் எஸ்டேட் முகவர் ராஜாங்கம் என்பவர் மூலம் 2.50 லட்சத்திற்கு 1200 ச.அ இடத்தை வாங்கியுள்ளார். அதே வீட்டுமனையை ராஜாங்கம் பல்வேறு மோசடி செய்து சேகர் என்பவருக்கும் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து 2019ல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில் கடந்த 2021 ம் ஆண்டு ராஜாங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தராமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி ராஜாங்கத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து வீட்டுமனையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுசிலா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்

Tags:    

Similar News