கழிவுநீரை சுத்தம் செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் மனு
பெருந்துறையில் கழிவுநீரை சுத்தம் செய்து அதற்கு நிரந்தர தீர்வு காண பாஜக சார்பில் ஊரக அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.;
பெருந்துறை ஒன்றியம், குள்ளம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒருசில தெருக்களில், கழிவு நீர் செல்லும் கால்வாய் இல்லாத காரணத்தினால் ஊர் மாரியம்மன் கோவில் அருகே கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளது. அக்கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகள் அனைவரும் கோவில் அருகேதான் விளையாடி வருகின்றனர். அங்கு தேங்கி நிற்கும் சாக்கடை நீரினால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பெருந்துறை ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள மேலாளரிடம் வடக்கு மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பட்டக்காரன்.சிதயாள் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.