கோவில்களை திறக்க அனுமதி: தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமாகா மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.;
ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை முன்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த யுவராஜா, டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு போர்க்கால் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் தேர்தலின் போது திமுக நீட் தேர்வு விலக்கு, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்து 5 மாத காலமாகியும் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை எனக்கூறிய அவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெரும் என்றும் தெரிவித்தார்.