கொடுமுடியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
கொடுமுடியில் நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது
ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் கிளாம்பாடி புஞ்சை கொளாநல்லி கிராமத்திற்கு நடுப்பாளையம் சமுதாயக் கூடத்திலும், புஞ்சை கிளாம்பாடி கிராமத்திற்கு சோளங்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் இன்று காலை 10 மணி முதல் பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது