அரசு பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த பயணி பலி
ஈரோடு அருகே வளைவில் திரும்பிய அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பயணி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
மொடக்குறிச்சியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, நாடார் மேடு நிறுத்தத்தில் ஜோசப் என்பவர் ஏறினார். இந்நிலையில் பேருந்தானது சாஸ்திரி நகர் பிரிவில் சென்றுகொண்டிருந்தபோது வளைவில் திரும்பியது. அப்போது பேருந்தில் இருந்து ஜோசப் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜோசப்பை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஜோசப் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.