ஈரோடடில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் பொது இடங்களில் அனுமதி

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மடடுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக ஈரோடு மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-01 10:15 GMT

ஈரோடு மாநகராட்சி.

ஈரோடு மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 71 உட்பிரிவு ஒன்றின்படி ஒருநாள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நியாய விலைக்கடைகள், திரையரங்கு, திருமண மண்டபம், வங்கிகள், அரசு அலுவலகங்கள், துணிக்கடைகள், கடைவீதிகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

மேலும் பொது இடங்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு குறிப்பிட்ட இடத்தில் உரிமையாளர்கள் தடுப்பு ஊசியை செலுத்தியவர்களை மட்டுமே உள்ளே வந்து செல்வதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News