குளோரின் வாயு சுத்திரிப்பு ஆலையில் வாயு கசிவு காரணமாக ஒருவர் உயிர் இழப்பு

குளோரின் வாயு சுத்திரிப்பு ஆலையில் வாயு கசிவு காரணமாக ஒருவர் உயிர் இழப்பு. மேலும். 13 க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில், அனுமதி.

Update: 2021-12-11 11:15 GMT

ஆய்வு  மேற்கொள்ளும் கலெக்டர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு ராயர்பாளையம் பகுதியில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீதரன் கெமிக்கல் குளோரின் வாயு சுத்திகரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக 30-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு இந்தப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஆலையில் குளோரின் சுத்திகரிப்பு ஆலையில் தீடிரென குளோரின் வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனை ஆலை உரிமையாளர் தாமோதரன் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.

அப்போது எதிர்பாரதவிதமாக குளோரின் கசிவு, ஆலை முழுவதும் பரவி சம்பவ இடத்திலேயே தாமோதரன் உயிர் இறந்து உள்ளார். மேலும் அந்தப்பகுதியில் இருந்த 13-க்கும் மேற்பட்டவர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அக்கம் பக்கத்தினர் மூச்சு திணறல்களால் பாதிக்கப்பட்ட அவர்களை பத்திரமாக மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஆலையில் மீதமுள்ளவர்களையும் பத்திரமாக மீட்கும் பணியை மேற்கொண்டனர். மேலும் குளோரின் கசிவு ஏற்படமால் இருக்க தீயனைப்பு துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News