சாதி மறுப்பு திருமணத்தில் கலந்து கொண்ட நீலகிரி எம்பி ஆ.ராசா

பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் கொள்கையை பரப்புவோம் என ஈரோட்டில் நடந்த சாதி மறுப்பு திருமணத்தில் நீலகிரி எம்பி ஆ.ராசா பேசினார்.;

Update: 2022-02-06 08:45 GMT

சாதி மறுப்பு திருமணத்தை கலந்து கொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா .

ஈரோட்டில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணத்தை கலந்து கொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, திருமணத்தை நடத்தி மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சாதி மறுப்பு திருமணத்தை நடத்துவதற்கும் பேசுவதற்கு அரசியல் கட்சிகள் அஞ்சுகிற காலத்தில் பெரியாரால்தான் தற்போது சாதி மறுப்பு திருமணம் நடைபெற்று வருகிறது. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அருந்ததியர் மற்றும் அடக்கப்பட்ட சமுதாயத்தினர் மேலே வரவேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு உண்டு. பெரியாரின் கொள்கை இன்னும் வாழ வேண்டும். சாதி மறுப்பு திருமணங்கள் அதிகம் நடைபெற வேண்டும். பெரியாரின் கொள்கைகளை தூக்கி பிடிக்கின்ற மகத்தான தலைவாராக தமிழக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் ஆகியோரது கொள்கையை பரப்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News