ஈரோட்டில் மர்மமான முறையில் பெண் கொடூர கொலை-எடிஎஸ்பி நேரில் விசாரணை

ஈரோட்டில் மர்மமான முறையில் பெண் கொடூர கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏடிஎஸ்பி நேரடி பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Update: 2021-11-13 17:00 GMT
ஈரோட்டில் பெண் மர்ம முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

ஈரோடு  நியூ சக்தி கார்டன் அருகே   சாக்கு  கிடந்துள்ளது. அதில் ரத்தகறைகள் இருந்தன. மேலும் அந்த சாக்கில் இருந்து துர்நாற்றமும் அடித்தது.

இதனையெடுத்து அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் சாக்கை திறந்து பார்த்தபோது சாக்காகினர். சாக்கில் இறந்த நிலையில் பெண்ணின் உடல் இருந்தது. உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டது.

இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் தடய அறிவியல் நிபுணரைக் கொண்டு ஆய்வு செய்தனர். இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவில்லை. இது குறித்து ஏடிஎஸ்பி தலைமையிலான போலீசார் மர்ம கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் சம்பவ இடத்தின் அருகே உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News