இல்லம் தேடி கல்வி திட்ட விழாவை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

இந்தியாவிலேயே சிறந்த திட்டமாக இல்லம் தேடி கல்வி திட்டம் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் முத்துசாமி கூறினார்.

Update: 2021-12-01 15:00 GMT

இல்லம் தேடி கல்வி திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி.

அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்..

ஈரோடு மாவட்டம் கூரப்பாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி தலைமை ஏற்றார். விழாவை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் ஆக பங்கேற்க தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் 11,000 தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் முதல் கட்டமாக 800 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 500 பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழக அரசு எடுக்கும் பல திட்டங்கள் மக்களை தேடி இல்லங்களுக்கு வரும் திட்டமாக உள்ளது என்றும் இல்லம் தேடி கல்வித் திட்டம் மாபெரும் வெற்றியை பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News