ஈரோட்டில் பட்டாசு வெடிக்க பயன்படும் நீள பத்தி உற்பத்தி தீவிரம்

கனிராவுத்தர் குளம் அருகே சாதிக் என்பவர் கடந்த 42 ஆண்டாக பட்டாசு வெடிக்க பயன்படுத்தப்படும் பத்தி தயாரித்து விற்பனை செய்கிறார்.

Update: 2021-10-19 16:30 GMT

ஈரோடு, சூளை கனிராவுத்தர் குளம் அருகே பச்சைப்பாளிமேட்டில், சாதிக் என்பவர் கடந்த, 42 ஆண்டாக தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க பயன்படுத்தப்படும் பத்தி தயாரித்து விற்பனை செய்கிறார்.

இதுகுறித்து சாதிக் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும், 2.5 அடி நீளமுள்ள பத்தி, நான்கு லட்சம் எண்ணிக்கையில் உற்பத்தி செய்து விற்பனை செய்வோம். தீபாவளிக்கு ஐந்து மாதம் முன் உற்பத்தியை துவங்கி, தமிழகம் முழுவதுக்கும், கேரளா, கர்நாடகாவுக்கும் அனுப்பி வைப்போம். இந்தாண்டு ஊரடங்கு, பெங்களுருவில் மூலப்பொருள் தட்டுப்பாட்டால் கடந்த ஒரு மாதமாக உற்பத்தி நடப்பதுடன், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பத்தி அனுப்பும் பணி நடக்கிறது.

கடந்தாண்டுகளில் மொத்த விற்பனையில் ஒரு பத்தி, 3 முதல், 3.50 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வோம். இந்தாண்டு கரித்துாள், மரத்துாள், தென்னங்குச்சி என மூலப்பொருள் விலை உயர்ந்து, 4 முதல் 4.50 ரூபாய்க்கு விற்கிறோம். இதனை குடிசைத்தொழிலாக செய்வதால், அதிகமாக செய்து இருப்பு வைக்க இயலாது.

இப்பத்தியை பாதுகாப்பானதாகவும், குழந்தைகள், பெரியவர்கள் கைகளில் கரித்துாள், மரத்துாள் பட்டாலும் பக்கவிளைவு ஏற்படாமல் செய்வதால், இதனை விரும்பி வாங்குவார்கள். ஒரு பத்தி, ஆறு மணி நேரம் எரியும்படி செய்கிறோம். கடைகளில் இதனை, எட்டு முதல், பத்து ரூபாய்க்கு விற்கின்றனர். இன்னும் தீபாவளிக்கு 15 நாட்கள் உள்ள நிலையில், பத்தி உற்பத்தியை விரைவுபடுத்தி உள்ளோம், என்றார்.

Tags:    

Similar News