உள்ளாட்சி தேர்தல் : பாமக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஈரோட்டில் பாமக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-11-30 10:15 GMT

பாமக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற இந்த கூட்டத்தில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என்றும், மேலும் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து செல்லும்போது அன்புமணி மருத்துவர் ராமதாஸ் கொள்கைகளை விளக்கி வாக்குகளை சேகரிக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு வார்டுகளிலும் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நிற்பதுபோல் எண்ணி பொதுமக்களை தினமும் சந்தித்து களப்பணி ஆற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர்கள் எஸ் எல் பரமசிவம, எம்பி வெங்கடாசலம் மாநில துணை பொதுச்செயலாளர் த.பா. பரமேஸ்வரன், மாநகரச் செயலாளர் எஸ் ஆர் ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி, ராஜேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News