சத்தியமங்கலம் அருகே வாகனம் மோதி 3 வயது மதிக்கத்தக்க சிறுத்தை பலி

சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மூன்று வயதுள்ள மதிக்கத்தக்க சிறுத்தை பலியானது.;

Update: 2022-01-03 00:45 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூன்று வயது மதிக்கத்தக்க சிறுத்தை பலி..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதனிடையே, பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக செல்லும் திண்டுக்கல் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதை, 1-வது கொண்டை ஊசி வளைவு முன்பு, சிறுத்தைக்குட்டி  ஒன்று,  சாலையை கடக்க முற்பட்டுள்ளது.

அப்போது எதிர்பாரத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சிறுத்தை உயிரிழந்தது. இதுகுறித்து வாகன ஓட்டி ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சத்தியமங்கலம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை கைப்பற்றி, மோதிய வாகனம் எது என, சோதனைச்சாவடி சிசிடிவி. காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News