திண்டல் முருகன் கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா
திண்டல் முருகன் கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா தொடங்கியது. சூரசம்ஹாரம், திருக்கல்யாணத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக இந்த ஆண்டு கந்தசஷ்டி விழாவில் ஏராளமான கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில் இன்று காலை கந்த சஷ்டி விழா சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. வரும் 9ஆம் தேதி மாலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, 10-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வரும் 9ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 10-ம் தேதி காலை 6 மணி வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதுபோல் விழாவையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வீடுகளிலேயே காப்பு கட்டி விரதம் இருந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் முன்பு இந்து அறநிலைய துறை சார்பில் போர்டு வைக்கப்பட்டு உள்ளது.