ஈரோட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகள் புறக்கணிப்பு
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.;
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தல் செலவினங்கள் முழுமையாகவும், தேர்தல் மதிப்பூதியம் வழங்கவும் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு பணியிடங்கள் ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உயர் அதிகாரிகள் மற்றும் நிதித்துறை அமைச்சரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகள் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.