ஈரோட்டில் கனமழை: வீட்டின் சுவர் இடிந்தது
ஈரோட்டில் அதிகாலை பெய்த மழை காரணமாக சூரம்பட்டியில் குருசாமி என்பவருக்கு சொந்தமான வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.
ஈரோடு சூரம்பட்டியில் அதிகாலை பெய்த மழை காரணமாக சூரம்பட்டி ஸ்டாலின் வீதியில் குருசாமி என்பவருக்கு சொந்தமான வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த தகவல் அறிந்து தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆலோசனையின் படி மாநகர செயலாளர் சுப்பிரமணி வழிகாட்டுதலில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிந்த சுவர்களை அப்புறப்படுத்தப்பட்டது.