கைத்தறி நெசவாளர்கள் 12 சதவீத ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கைத்தறி நெசவாளர்கள் 12 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் அருகே கைத்தறி நெசவாளர்கள் 12 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திட வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு வரும் ஜனவரி 1 முதல் கைத்தறி நெசவு மூலம் உற்பத்தி செய்யப்படும் போர்வை மற்றும் பட்டு உற்பத்திகளுக்கு 5 மற்றும் 12 சதவீத ஜிஎஸ்டி வரியை உயர்த்தி உள்ளது.
இதை முழுவதும் ரத்து செய்திட வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தினர் இன்று வீரப்பன் சத்திரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வரியை ரத்து செய்யாவிடில் ஏற்கனவே நுகர்வோர்கள் கைத்தறி நெசவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் துணிகள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் ஜிஎஸ்டி வரியை மேலும் உயர்த்தும் போது கைத்தறி துணிகளுக்கான மவுசு பெருமளவில் குறையும் எனவும் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் எனவும் கைத்தறி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.