பெரியார் நகர் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற கோரி புகார் மனு

மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றகோரி முன்னால் மண்டல தலைவர் புகார் மனு.;

Update: 2021-10-27 16:30 GMT
பெரியார் நகர் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற  கோரி புகார் மனு

முன்னாள் மண்டல தலைவர் பெரியார் நகர் மனோகரன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

  • whatsapp icon

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் 45வது வார்டு பகுதிகளில் மொத்தம் 41 வீதிகள் உள்ளன. இப்பகுதியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மற்றும் 3 ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் உள்ளனர். மேலும் இந்தப் பகுதியில் மருத்துவமனைகள் ஏராளமாக உள்ளன. மேலும் மாநகராட்சி ஆணையாளர் இல்லமும் இப்பகுதியில்தான் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வாழும் பகுதியில் கழிவுநீர் சாக்கடைகள் குப்பைகள் என சுத்தப்படுத்தபடாமல் அப்படியே உள்ளது. இதனால் இப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக இப்பகுதியை போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்து தருமாறு முன்னாள் மண்டல தலைவர் பெரியார் நகர் மனோகரன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Tags:    

Similar News