கொரோனாவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி வழங்கும் விழா

கொரோனோவினால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு சிறப்பு நிதி வழங்குதல், தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா.;

Update: 2021-10-23 10:15 GMT

தமிழக வீட்டுவசதி வாரிய அமைச்சர் முத்துசாமி சிறப்பு நிதி வழங்கினார்.

ஈரோடு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலனின் சார்பில் கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கொரோனோ சிறப்பு நிதி வழங்குதல் மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்ர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி 191 பேருக்கு 1 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்துசாமி, தமிழகத்தில் வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த பலமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டு விட்டதாகவும் எனினும் , நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார். வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவதை எளிமைப்படுத்த ஒற்றை சாளர முறை கொண்டு வரப்படும் என்ற அமைச்சர் முத்துசாமி, தமிழகம் முழுவதும் 195 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளால் மோசமாக எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதை 2 ஆண்டுகளில் சரி செய்யப்படும் என்றார்.


Tags:    

Similar News