50க்கும் மேற்பட்டோரிடம் 15 லட்சம் ரூபாய் வரை மோசடி

கடன் வாங்கித் தருவதாக 50க்கும் மேற்ப்பட்டோரிடம் 15 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியினர் கைது செய்ய கோரி புகார்.

Update: 2021-11-13 13:00 GMT

புகார் அளிக்க வந்த பொதுமக்கள்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வாணி மூங்கில்பட்டி, திருவள்ளுவர் நகர், லீலாவதி தலைமையில் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் அளித்த புகாரில் கூறியதாவது:

சக்கரா எம்.ஜி பைனான்சில் கடன் வாங்கி தருவதாக மகாலட்சுமி- சக்திவேல் தம்பதியரிடம் டெபாசிட் தொகையாக மூவாயிரம் முதல் மூன்று லட்சம் வரை கடந்த ஓராண்டுக்கு முன் அளித்தோம். ஆனால் இதுவரை யாருக்கும் கடன் வாங்கி கொடுக்கவில்லை. இதுபற்றி கேட்ட போது லாக்டவுன் இருந்ததால் கடன் பெற முடியவில்லை, விரைவில் கடன் தொகை பெற்று தருவதாக உறுதியளித்தார்.

இதையடுத்து 50க்கும் மேற்ப்பட்டோர் ரூ.15 லட்சம் வரை தொகையை அளித்துள்ளனர். கடன் தொகை கேட்டு தினமும் அவரது வீட்டுக்கு பொதுமக்கள் பலர் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். இந்நிலையில் அவரது வீடு கடந்த சில தினங்களாக பூட்டப்பட்டு கிடக்கிறது. அவரது மொபைல் போன் எண்ணும் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. ஏழை, எளிய மக்களாகிய நாங்கள் அளித்த பணத்தை அவரிடம் இருந்து மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News