ஈரோட்டில் கள்ள நோட்டு விநியோகம் செய்தவர் கைது
ஈரோட்டில் கள்ள நோட்டு விநியோகம் செய்ததில் தேடப்பட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
கடந்த 2019ம் ஆண்டு சூரம்பட்டியில், கள்ளநோட்டு மாற்றும்போது சலாம் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் கொடுமுடியை சேர்ந்த சேக் மொய்தீனை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் கள்ள நோட்டுகளை கொடுத்ததாக திருப்பூரை சேர்ந்த தலைமறைவாக இருந்த சதீஷை, தீவிரமாக தேடி வந்தனர்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்த மூன்று மாதங்களாக தீவிர தேடுதலுக்கு பிறகு சதீஸை, தற்போது கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கனவே கள்ள நோட்டு தயாரித்து சிறை சென்றவர் குறிப்பிட்டதக்கது. ஈரோட்டில் கள்ளநோட்டு விநியோகம் செய்ததில் தேடப்பட்ட நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.