தீவிர சிகிச்சை பிரிவில் ஈரோடு எம்.எல்.ஏ!

தற்போது மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் நிலை மோசமாகி விட்டதாகவும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. விரைவில் மருத்துவமனை தரப்பில் தெளிவான அறிக்கை ஒன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.;

Update: 2023-03-26 07:47 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவேரா. இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான ஈ வி கே எஸ் இளங்கோவனின் மகன். கடந்த ஆண்டு திடீர் உடல்நலக் குறைவால் மரணமடைந்த நிலையில், இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அவரது தந்தையை வேட்பாளராக களமிறங்கினார்.

காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் சில சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கினர். இதில் அதிக வாக்குகளைப் பெற்ற ஈ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இவருக்கும் இரண்டாம் இடம் பிடித்த அதிமுக வேட்பாளருக்கும் உள்ள வித்தியாசம் 66575 வாக்குகள் ஆகும்.

எம்எல்ஏ வாக பதவியேற்ற ஈ வி கே எஸ் இளங்கோவன் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார் எனவும் தகவல் கிடைத்தது.

அவருக்கு நெஞ்சுவலி உட்பட சில பிரச்னைகள் இருப்பதால் தொடர் கண்காணிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வந்தவர் சாதாரண வார்டுக்கு எந்நேரமும் மாற்றப்படலாம் என்று தகவல் வெளியானது. பின்னர் அவரே தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டிருந்தார். சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என அவரே உற்சாகமாக கூறியிருந்தார்.

தற்போது மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் நிலை மோசமாகி விட்டதாகவும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. விரைவில் மருத்துவமனை தரப்பில் தெளிவான அறிக்கை ஒன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News