நூல் விலை உயர்வு: ஈரோட்டில் இன்று 4000 கடைகளை அடைத்து எதிர்ப்பு
நூல் விலை உயர்வை கண்டித்து, ஈரோட்டில் இன்று 4000 கடைகள் திடீரென அடைக்கப்பட்டுள்ளன.;
ஈரோட்டில், நூல் விலை உயர்வை கண்டித்து, இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக நூல் விலை அதிகமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, ஜவுளி நிறுவனங்கள் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.
ஆனால், அரசு இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சூழலில், நூல் விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி நிறுவனங்கள் இன்றும் நாளையும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தன. அதன்படி, இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதன் காரணமாக ஈரோட்டில் இன்று 4000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக, கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளனர். நாளையும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.