ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த பெண்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம் பாளையத்தைச் சேர்ந்த கூலி பந்தல் தொழிலாளியான சங்கர் குடிபோதைக்கு அடிமையான நிலையில், இவரது மனைவி மலர்க்கொடி மற்றும் இரண்டு மகள்களுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் சங்கர் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதாகவும், குடிபோதையில் அவரது தாய் மற்றும் தம்பியுடன் சேர்ந்து மலர்கொடியையும் அவரது இரண்டு பெண் குழந்தைகளையும் தாக்குவதாக பலமுறை சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தார். இதனால், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மலர்கொடி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தற்கொலைக்கு முயன்ற அவர்களை தடுத்து மலர் கொடியின் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.