ஈரோடு மாநகராட்சி துணை மேயராக செல்வராஜ் தேர்வு

ஈரோடு மாநகராட்சி துணை மேயராக, செல்வராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.;

Update: 2022-03-05 00:45 GMT

ஈரோடு மாநகராட்சி துணை மேயராக, திமுக வேட்பாளர்கள் செல்வராஜ் துணைமேயராக தேர்வு செய்யப்பட்டார்.

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில்,  ஆணையர் சிவகுமார் தலைமையில், நேற்று மாலை துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில், 21-வார்டு மாமன்ற உறுப்பினர் வி. செல்வராஜ் துணை மேயர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால்,  போட்டியின்றி துணை மேயராக தேர்வு செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் அறிவித்தார். இதனை தொடர்ந்து துணை மேயராக வெற்றி பெற்ற செல்வராஜூக்கு மேயர் நாகரத்தினம், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News