ஈரோடு மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் முத்துசாமி தொடக்கம்
ஈரோடு மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளை வீட்டுவசதி- நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தொடக்கி வைத்தார்
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழாவில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு தார்ச்சாலை, சிறு பாலம் மற்றும் தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் 50.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்புற சுகாதார நலவாழ்வு மையம் கட்டும் பணி என மொத்தம் ரூ.13.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார், துணை மேயர் செல்வராஜ், மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட துனை செயலாளர்கள் செல்லபொன்னி, சின்னையன், மாவட்ட பொருளாளர் ப.க.பழனிசாமி, செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி, பொதுகுழு உறுப்பினர் வில்லரசம்பட்டி முருகேஷ், பகுதி செயலாளர்கள் , மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.