15 கோடி மதிப்பிலான தொழில் முனைவோர் மனு: விண்ணப்பித்தவர்களுக்கு 50 சதவீத மானியம்

15 கோடி மதிப்பிலான தொழில் முனைவோர் மனு விண்ணப்பித்தவர்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தகவல்.;

Update: 2021-12-08 13:15 GMT

தொழில் முதலீட்டாளர்களுக்கான கடன் உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர்.

ஈரோட்டில் தொழில் முதலீட்டாளர்களுக்கான கடன் உதவி வழங்கும் விழா சென்னிமலை சாலையில் உள்ள ஈரோடு மாவட்ட தொழில் முதலீட்டாளர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன்உண்ணி கலந்து கொண்டு 15 கோடி ரூபாய்க்கான மணுக்களை பெற்றார்.

இந்த தொழில் கடன் விழாவானது இன்று முதல் வருகிற 15 ம் தேதி வரை பெரியார் நகரில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஈரோடு கிளையில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு கடன் வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது தொழில் குறித்து முழுமையான திட்ட அறிக்கையுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இம்முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு பரிசீலனை கட்டணத்தில் 50 சதவிதம் மானியம் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

Tags:    

Similar News