தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றிய பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நான்கு ஆண்டுகளாக பணியாற்றிய எங்களை பணி நிறுத்தம் செய்து விட்டு வேறு ஆட்களை ஒப்பந்ததாரர் நியமனம் செய்துள்ளனர்.

Update: 2021-11-15 11:15 GMT

தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றிய பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று நடந்தது. அதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் தங்களுக்குரிய குறைகள் பிரச்சனைகள் குறித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதன்படி இன்று பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சமூக பரப்புரையாளர் ஆக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இருந்து பணியாற்றிய பலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: கடந்த 2017 செப்டம்பர் மாதம் முதல் ஈரோடு மாவட்ட அனைத்து பேரூராட்சிகளிலும் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் சமூக பரப்புரையாளர் களாக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்தோம். ஆட்சி மாற்றத்திற்குப் பின் நான்கு ஆண்டுகளாக பணியாற்றிய எங்களை பணி நிறுத்தம் செய்து விட்டு வேறு ஆட்களை ஒப்பந்ததாரர் நியமனம் செய்து ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நான்கு மாத சம்பள தொகையை தராமல் இழுத்தடித்து வருகிறார்.

கொரோனா தொற்று காலத்தில் மாவட்டம் முழுவதும் கடும் சவால்கள் உடன் பணியாற்றினோம். ஆட்சி மாற்றத்திற்கு பின் எங்கள் பணிக்கு வேறு ஆட்களை நியமனம் செய்வதால் நாங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றோம். எனவே ஆட்சியர் அவர்கள் மாவட்டம் முழுவதும் அதே பணியாளர்களை பணி செய்திட ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடும்படி மனு அளித்துள்ளனர்.

Tags:    

Similar News